🛑CAD Hub இனால் நடாத்தப்படும் Art Competition🎨 இல் கலந்து உங்கள் கற்பனை திறன்களை✨ கைவண்ணமாக்கி🖌️ வெற்றி பெறுவதற்கான🤗 ஒரு அரிய வாய்ப்பு😍…🛑
● இப்போட்டியின் நோக்கம்
காலநிலை மாற்றம் தொடர்பான உங்கள் கண்ணோட்டம் மற்றும் கற்பனைத் திறன் எவ்வாறு உள்ளது என்பதை கைவண்ணம் மூலம் தெரியப்படுத்துவதும், கலையாற்றலை முன்னேற்றுவதுமாகும்.
👇இதற்காக நீங்கள்
“காலநிலை மாற்றமும் இன்றைய உலகும்” என்ற தொனிப் பொருளில் காலநிலை தொடர்பான உங்கள் கண்ணோட்டங்களை ஒரு சித்திரக்காட்சியாக,
•உங்கள் முழு பெயர்
•வயது
•மாவட்டம்
•பாடசாலை
•Whatsapp தொலைபேசி எண் என்பவற்றை type செய்து,
🪀 0728382121 என்ற whatsapp இலக்கத்திற்கு
📲 2025 March 28 ம் திகதிக்கு முன்னர் உடனடியாக அனுப்பி விடவும்.
● எப்படிப்பட்ட சித்திரங்கள் அனுப்பலாம்??
✅ காலநிலை மாற்றத்தின் விளைவுகளை பிரதிபலிக்கும் சித்திரங்கள்:🖼️
– வெப்ப மண்டல மாற்றங்கள்🌞
– வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்கள்
– பனிப்பாறைகள் உருகும் நிகழ்வுகள்
– காட்டுத்தீ, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள்
✅ இன்றைய உலகத்தில் காலநிலை மாற்றத்திற்கு மனிதர்களின் பங்கு
– குப்பைகள், பிளாஸ்டிக் மாசுபாடு
– தொழிற்சாலைகளின் மாசுபாடு
– கடல் மற்றும் நதிகளில் மாசுபடுத்தும் செயல்கள்
✅ பாதிப்பிற்கு எதிரான நல்ல உதாரணங்கள்:
– மரம் நடும் நிகழ்வுகள்
– இயற்கை பாதுகாப்பு முயற்சிகள்
– பசுமை சூழல் பாதுகாப்புக்கான செயற்பாடுகள்
● சித்திரம் வரையும் போது கவனிக்க வேண்டியவை:
* கலைப் படைப்பு கைவண்ணத்தால் வரையப்பட்டதாக இருக்க வேண்டும். (Digital Art அனுமதிக்கப்படாது).
* படைப்பின் அளவு A4 அல்லது A3 ஷீட்டில் இருக்க வேண்டும்.
* பயன்படுத்தப்படும் ஊடகம் (வர்ணங்கள், பென்சில் போன்றவை) எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
🎁 பரிசுகள்
போட்டியில் வெற்றி பெறும் 1ம் ,2ம், 3ம் இடங்களை பெறும் நபர்களுக்கு பெறுமதியான பரிசில் வழங்கப்படுவதோடு போட்டியில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் British council மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட certificate வழங்கப்படும்.
🚨 போட்டியில் பங்குபற்றும் நபர்கள் CAD Hub இன் அனைத்து சமூக வலைத்தளங்களையும் follow செய்து அதன் screenshot ஐ மேலே குறிப்பிட்ட இலக்கத்திற்கு whatsapp செய்து விடவும்.